இலங்கை வருகிறார் சமந்தா பவர்

Admin
Sep 08,2022

ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டத்தின் தலைவியும் அமெரிக்க இராஜ தந்திரியுமான திருமதி சமந்தா பவர் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது திருமதி பவார் அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வு
பொதுவாக, மனித உரிமைகளில் அதிக கவனம் செலுத்தும் அதிகாரியாக சமந்தா பவர் பார்க்கப்படுகிறார்.

அதன்படி, ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் பவரின் இலங்கைப் பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.