பிரான்ஸிலிருந்து யாழ்.வந்து திருணம் முடித்த இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

Admin
Sep 06,2022

பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து அண்மையில் திருணம் முடித்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த இளம் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த ஆ.அருள்குமார் (வயது-34) என்பவராவர்.

பிரான்ஸில் வசித்து வந்த அவர் விடுமுறையில் வந்திருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு யாழில் திருமணம் இடம்பெற்றுள்ளது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் திருமணத்தை முடித்து விட்டு சில தினங்களில் மீண்டும் யாழில் இருந்து பிரான்ஸ் செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வீட்டிற்கு அண்மையாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த அவர் யாழ். வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் உயிரிழப்புத் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.