அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் போராட்டத்துக்கு அழைப்பு

Admin
Sep 05,2022

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி (வியாழக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏர்பாடுகளை செய்துள்ளது.

மேலும் அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகள் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடதக்கது