"சர்வதேச விசாரணை தடைப்படுமாயின் மேற்கத்தேயமும் இந்தியாவுமே காரணம்"

Admin
Sep 04,2022

 ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை கொண்டுவராவிடின் மேற்கத்தேய நாடுகளும் இந்தியாவுமே காரணமாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை எடுக்கும் முயற்சிகள் எவராலும் தடுக்கப்பட போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.