நாணய நிதியத்தின் பணம் இலங்கைக்கு எப்போது கிடைக்கும்?; வெளியான தகவல்

Admin
Sep 04,2022

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஊழியர் மட்ட உடன்படிக்கை செய்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் பெறும் என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட 3 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது.

இது நான்கு வருட வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியாக வழங்கப்பட உள்ளது.

டிசம்பரில் பெறப்படும் முதல் கடன் தவணை சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படுகிறது.