மொட்டுக்குள் தொடரும் குழப்பம்:டளஸ் பக்கம் சாய நேரம் பார்த்திருக்கும் உறுப்பினர்கள்

Admin
Sep 03,2022

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான உறுப்பினர்கள் குழுவில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் பல உறுப்பினர்கள் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இவர்கள் குழுவில் இணைய உள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேச்சையாக இருந்த டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தனர்.

புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கான பூர்வாங்கத் திட்டங்களை இக்குழு தயாரித்துள்ளது, நேற்றையதினம் மாலை தனி அலுவலகம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.