கோத்தா அரசியலில் ஈடுபடுவாரா?; வெளியான தகவல்

Admin
Sep 03,2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள போதிலும் அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாலக கொடஹேவா, கோட்டாபயவின் வியத்ம அமைப்பின் பலமான அங்கத்தவராக செயற்பட்டுள்ளார். அவர் கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒருவராகும்.

மிரிஹான வீட்டில் தங்குவதற்கே கோட்டாபய எதிர்பார்ப்பதாக அண்மையில் என்னிடம் தெரிவித்துள்ளார். அதற்கமையவே அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் ஒரு போதும் அரசியலில் ஈடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே என்னிடம் கூறியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு திரும்பிய கோட்டபாய தனது அரசியல் செயற்பாடு குறித்து அவரே முடிவு எடுப்பார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.