கோட்டாபய தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

Admin
Sep 03,2022

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர் அவரது பாதுகாப்பிற்காக தனி பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, AFP செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அவரது பாதுகாப்பிற்காக கமாண்டோக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 90 நாள் விசாவில் தாய்லாந்தில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பவுள்ளார். 

கோட்டாபயவுடன் அவரது மனைவி, உதவியாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளனர், அதே குழுவும் ராஜபக்சவுடன் இலங்கை வரவுள்ளதாக AFP செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.