ஜெனிவாவை சமாளிக்க தீவிரமாக ஆராய்கிறது இலங்கை

Admin
Sep 02,2022

இம்முறை கூடும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின்  அமர்வின் போது,  இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களின் முன்னாயத்த  நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவும் கலந்துரையாடியுள்ளனர். 

இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்க செயற்பாடுகளை கட்டியெழுப்புதல்,  காணாமல்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்தல் மற்றும்  உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கும், சொத்து சேதங்களுக்குமான இழப்பீடுகளை வழங்குதல், பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் இந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.  மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட நிறுவனங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் இதில் கலந்துரையாடியுள்ளனர்.