இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று

Admin
Sep 02,2022

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அது தொடர்பிலான விவாதம் கடந்த 31ஆம் திகதி ஆரம்பமாகி இன்று வரையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்றைய 3ஆம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து, இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.