பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஹக்கீம் வலியுறுத்து

Admin
Sep 02,2022

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான தீர்மானங்களை மீளாய்வுக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி தெரிவித்தார்.

இந்நிலையில், தடைப்பட்டியலில் அதிகமான அப்பாவி மாணவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அதுதொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இது நாட்டில் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பாரிய சவாலாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்