ரவிகரன் மீது பௌத்த பிக்குகள் பொலிஸில் முறைப்பாடு

Admin
Sep 01,2022

குருந்தூர்மலை பௌத்த வழிபாடுகளுக்கு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இடையூறாக இருப்பதாக பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பௌத்த பிக்குகள் இது தொடர்பில் நேற்றுமுன் தினம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய, பலதடவைகள் தாம் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிக்கு ரவிகரன் இடையூறாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை தொலைபேசி மூலம் முல்லைத்தீவு பொலிஸார் தொடர்பு கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாளைய தினம் அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.