மைத்திரியின் மகனுக்கு புதிய பதவி

Admin
Sep 01,2022

முன்னாள்  ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை - பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று (31)    தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

தனது புதிய நியமனத்தைப் பயன்படுத்தி மக்களுக்காக பணியாற்றுவேன் என தஹாம் சிறிசேன தனது முகநூல் பதிவில் குறிப்பிடத்தக்கது.