'இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்'

Admin
Sep 01,2022

இலங்கை மண்ணோ அல்லது கடல் பிராந்தியமோ இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக பயன்படுத்தப்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதனை இன்று தெரிவித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையிடம் இந்த உறுதி மொழியை அளித்துள்ளதாக அவர் நேற்று (31) புதுடில்லியில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவை 'தர்க்கரீதியான பங்காளி' என்று மொரகொட விபரித்தார்.

இந்தியா இல்லையென்றால் இலங்கை, கடுமையான பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும்.

எனவே இலங்கையர்கள் இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா 3.8 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது.

எனினும் இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை என்றும் மொரகொட குறிப்பிட்டுள்ளார்.