விடுதலைப் புலிகளின் தலைவர் கூறியதையே நாம் செய்கிறோம்

Admin
Aug 31,2022

இந்தியாவின் ஆதரவோடு தான் இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சாத்தியமாகும் என்பதினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் என முன்னாள் வங்கி முகாமையாளரும், பொருளாதார ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரேரனைகள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் ஆதரவினை உறவுகள் பேண வேண்டியுள்ளது.அதேநேரம் பிராந்தியமென கருதப்படுமிடத்து இந்தியாவின் முதன்மையை தாண்டி தமிழர் தரப்பு ஒருபோதும் செயற்படாது.இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இந்தியாவின் ஆதரவோடு தான் இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சாத்தியமாகும் என்பதினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.