நாடாளுமன்றில் கட்சி தாவல்கள்; இன்று இடம்பெறலாம் என எதிர்பார்ப்பு

Admin
Aug 31,2022

நாடாளுமன்றில் இன்று ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கின் சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த மாற்றத்தினால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை  நாடாளுமன்றில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.இது தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெறவுள்ளது.