சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதி பரீட்சையில் சித்தி

Admin
Aug 30,2022

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மகசீன் சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மகசீன் சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மகசீன் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்

அவர் மேலும் தெரிவிக்கையில், " பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு அனுப்பப்படும் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றும் முக்கிய நோக்கத்துடன் சிறைச்சாலை திணைக்களத்தின் பூரண ஈடுபாட்டுடன் கைதிகள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான கிளிநொச்சியை சேர்ந்த 38 வயது கைதி 2 A 1 S பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

 அத்துடன், கேகாலையைச் சேர்ந்த 46 வயதான கைதி, 3 S பெறுபேறுகளை பெற்றுள்ளார்", எனக் குறிப்பிட்டார்.