கோட்டா நாடு திரும்பும் திகதி குறித்த அறிவிப்பினை வெளியிட்டது மொட்டு கட்சி!

Admin
Aug 30,2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் தற்போதைய நிலையிலும் மொட்டு கட்சியே பலமானதொரு அரசியல் இயக்கமாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.