'முன்னாள் ஜனாதிபதிக்கு சகல வசதிகளும் தயார்'

Admin
Aug 30,2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கைக்கு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ திரும்பி வந்தால், முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில் அவர் இலங்கைக்கு திரும்புவார் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.