இலங்கை தொடர்பில் இந்தியா, மாலைதீவு அதிகாரிகள் கரிசனை

Admin
Aug 30,2022

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருந்ததாகவும், இலங்கையின் நிதி நெருக்கடி எங்களை கவலையடையச் செய்துள்ளது எனவும் குறித்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, வெளிநாடுகளுடன் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட்டிற்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.