தன்னை விட 21 வயது குறைவான பிரபலம் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்: எதிர்ப்பும், ஆதரவும்

Admin
Aug 20,2023

ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ரஜினிகாந்த நேற்று சந்தித்தார்.

அப்போது யோகியின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

72 வயதான ரஜினிகாந்த், 51 வயதான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது முறையல்ல என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், யோகி ஆதித்யநாத் மீதான மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் அவர் காலில் விழுந்தார் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஆன்மீகவாதியான யோகி கால்களில் ரஜினி விழுந்து வணங்கியது தவறில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.