ஜெனீவாவில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Admin
Aug 28,2022

அவசரகாலச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள் இன்று (28) காலை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

நெறிமுறையற்ற, ஆணைப் பறிக்கப்பட்ட ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்தக் கோரியும் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

மின்சாரத் தடை, எரிபொருள், எரிவாயு, மருந்துப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களால் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சவாலான சூழ்நிலையின் காரணமாக, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தைப் பெறுவதே பொதுமக்களின் விருப்பமாகும். 

பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளான வெளிப்பாடு மற்றும் வெளியீடு, கைது மற்றும் ஊடக தணிக்கை ஆகியவற்றிலிருந்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் கருத்து வேறுபாடு உட்பட அனைத்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி குறித்த போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.