கனடாவில் புதிய கோவிட் தொற்று திரிபு

Admin
Aug 11,2023

ஈரான் மீது மேலும் தடைகளை அறிவித்த கனடா

ஈரான் மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈரானிய பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட சிலர் மீது இவ்வாறு கனடா தடை விதித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகவும் உக்ரைன் போர் தொடர்பிலும் ஈரான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஈரானிய தேசிய பாதுகாப்பு பேரவையின் பிரதானி அலி அக்பர் அஹமடின் மீது தடை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

ஈரானிய ட்ரோன் துறைசார் சிலருக்கு எதிராகவும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தினால் இதுவரையில் 13 தடவைகள் ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க முடியாது. மேலும் அவர்களமு சொத்துக்கள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2

கனடாவில் புதிய கோவிட் தொற்று திரிபு


கனடாவின் அன்றாடியோ மாகாணத்தில் புதிய கோவிட் தொற்று திரிபு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிக அளவு தீவிரமாக பரவி வரும் ஓர் கோவிட் திரிபு கனடாவையும் தாக்கியுள்ளது.

ஒன்றாரியோவின் பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நுபு.5 என்ற இந்த கோவிட் திரிபானது ஒமிக்ரான் தெருவின் ஓர் பிரிவு என தெரிவிக்கப்படுகிறது.

மொத்த கோவில் திரிபு பரவுகையில் 35 சதவீதமானவை இந்த வகை திரிபினால் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் கனடாவிலும் இந்த வைரஸ் தொற்று அதிகரிக்கலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

3

கனடாவில் கண் சொட்டு மருந்து குறித்து எச்சரிக்கை!

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க்ரோமிலின் கண் சொட்டு மருந்து வகைகள் இவ்வாறு மருந்தகங்களிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து வகையினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை கண் சொட்டு மருந்தினை பயன்படுத்தும் போது pளநரனழஅழயௌ யநசரபiழெளய என்னும் பக்ரீரியாவினால் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

10 மில்லிலீற்றர் அளவுடைய அனைத்து வகையான க்ரோமிலின் கண் சொட்டு மருந்துகளும் சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த கண் சொட்டு மருந்தினால் பாதிப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கண் சொட்டு மருந்தினால் பாரதூரமான நோய் நிலைமைகள் எதுவும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4

நைஜர் விவகாரத்தில் கனடாவின் அதிரடித் தீர்மானம்

நைஜருக்கான உதவிகள் நிறுத்தப்படும் என கனடா தெரிவித்துள்ளது.

நைஜர் நாட்டுக்காக இதுவரை வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நைஜரில் ராணுவ சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான வசையில் நைஜரில் ஆட்சி நிறுவப்பட்டுள்ளமைக்கு கனடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை நைஜருக்கு கனடிய அரசாங்கம் வழங்கி வந்த உதவி திட்டங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியான ஆட்சி மீண்டும் நைஜரியில் நிறுவப்படும் வரையில் உதவிகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேரடியான அனைத்து உதவிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும்இ பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது


Related News