எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் மீண்டும் போராட்டம்?

Admin
Aug 28,2022

எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தை நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

இந்தநிலையிலேயே அன்றைய தினம் கொழும்பிற்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவு, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.