தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம்-படங்கள் இணைப்பு

Admin
Aug 27,2022

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் இன்று (27) சனிக்கிழமை மாலை கொடியேற்றத்தோடு ஆரம்பமாகியது.

பிரதமகுரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் மஹோற்சவ பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது.

செப்டெம்பர் 8 ஆம் திகதி சப்பைரதத் திருவிழாவும், மறுநாள் 9 ஆம் காலை 9 மணிக்குத் தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்டெம்பர் 10 ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும், அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், மறுநாள் 11 ஆம் திகதி பூக்காரர் பூஜையும் நடைபெறவுள்ளது.