புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆபத்து

Admin
Aug 27,2022

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட போது, ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் குறித்து விசாணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பொலிஸார் இதனை நேற்று தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.