13ஆம் திருத்தத்தின்மூலம் இந்தியாவைப் பொறிக்குள் சிக்க வைத்துள்ள சிறிலங்கா - தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர வகிபாகத்தை மட்டுப்படுத்துகிறது: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!!!

Admin
Jul 21,2023

சர்வதேச ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்தி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

 

டெல்லியில் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதம் 21ஆம் திகதி சந்திப்பிற்கு முன்பாகஇ பிரதமர் மோடிக்கு ஜூலை 17இ 2023 கடிதமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அனுப்பியுள்ளார்..

 

 

இராணுவப் பலம்இ பொருளாதார வலிமையின் அடிப்படையில் இந்தியாவுக்கும்இ சிறிலங்காவிற்குமான சமச்சீரற்ற உறவின் காரணமாக சமநிலையைப் பேணுவதற்காக இராஜதந்திரத்தையும்இ ஏமாற்று வித்தையையும் சிறிலங்கா பயன்படுத்துகின்றது என கடிதத்தில் உருத்திரகுமாரன் சுட்டிக் காட்டியுள்ளார். சிறிலங்கா அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துடன் இந்தியாவைப் பொறிக்குள் சிக்க வைத்துஇ தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர வகிபாகத்தை மட்டுப்படுத்தும் சிறிலங்காவின் வெற்றிகரமான நகர்வுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் மோடியை உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இந்தியாவைச் சுற்றியிருக்கும் 13ஆவது திருத்தக் கயிறை வெட்டி விடுவதற்கான உகந்த நேரம் இது என கடிதத்தில் பிரதமர் உருற்றகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டஇ

ஈழத்தமிழர்களுக்கெதிரான 1983 இனப் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவுநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாகவே சந்திப்பு இடம்பெறுகின்றது என்பதையும் கடிதத்தில் உருத்திரகுமாரன் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதை இனவழிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வகைப்படுத்தியதையும் உருற்றகுமாரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

 

சுதந்திர நாட்டிற்காக அமைதி வழி முன்னெடுத்தலைக்கூட தடை செய்யும் சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் காரணமாக இலங்கைத் தீவிலுள்ள தமிழர்கள்இ தங்களது அரசியல் பெருவிருப்புக்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் காணப்படுகின்றனர் என்பதையும் பிரதமர் உருற்றகுமாரன் கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

 

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வொன்றில் ஈழத் தமிழ் அரசியல் தலைமைத்துவமானது ஒன்றிணைந்த நிலையில் இல்லாத விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த உருத்திரகுமாரன்இ இது பன்மைத்துவத்தின் ஆரோக்கியமான அடையாளமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நோக்குவதாகவும்இ முடிவெடுப்பவர்கள் ஈழத் தமிழீழ மக்களே ஆவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ்த் தேசத்தின் இறையாண்மையானது ஒவ்வொரு தமிழர்களிலும் தங்கியுள்ளது எனக் கடிதத்தில் தெரிவித்துள்ள பிரதமர் உருற்றகுமாரன்இ அந்தவகையில் இந்த பன்மைத்துவத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான முறையான தீர்வானது ஈழத் தமிழர்களிடையே இந்தியா தலைமையில் முன்னெடுக்கப்படும் சர்வதேச அனுசரணையொன்றுடனான பொதுவாக்கெடுப்பொன்றே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதாகக் கூறியுள்ளார்.

 

 

'இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே என்பது எமக்குத் தெரியும்இ 13ஆவது திருத்தத்தின் சாதக அல்லது பாதகங்களை நான் தற்சமயம் விவாதிக்க விரும்பவில்லை. 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தம் இயற்றப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு மேலாக அது வெறுமனே சட்டப் புத்தகங்களிலே உள்ளது. 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவின் மீண்டும் மீண்டுமான கோரிக்கைகளுக்கும்இ இதை அமுல்படுத்துவது என்ற பல சிறிலங்காத் தலைவர்களின் உறுதிமொழிகளுக்கும் மத்தியில்இ 13ஆவது திருத்தமானது  இன்னும்

அமுல்படுத்தப்படவில்லை. இதன் அடிப்படையிலும்இ சிறிலங்காவின்

 மகாவம்ச மனநிலையிலும் 13ஆவது திருத்தத்தை சிங்களமானது

 ஒருபோதும் அமுல்படுத்தாது என உறுதியாக நாடுகடந்த தமிழீழ 

அரசாங்கம் நம்புகின்றது' என பிரதமர் உருற்றகுமாரன் கூறியுள்ளார். '13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எவருக்கும் தமிழர்களின் சம்மதம் தேவையில்லை'

 

அல்பேர்ட் ஐன்ஸ்டீனை (யுடடிநசவ நுiளெவநin) மேற்கோள் காட்டிய பிரதமர் உருத்திரகுமாரன் 'முட்டாள்தனத்தின் வரைவிலக்கணமானதுஇஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்துஇ வித்தியாசமான முடிவை எதிர்பார்பது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளைஇ 'சிறிலங்கா சுதந்திரம் பெற்றதிலிருந்துஇ இந்தியா தனது செல்வாக்கு மண்டலத்தில் சிறிலங்காவை வைத்திருபதற்காக தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்புகளை இந்தியா மேற்கொண்டுள்ளது' என கடிதத்தில் உருத்திரகுமாரன் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவின் விட்டுக் கொடுப்புகளுக்கு உதாரணங்களாக பின்வருவனற்றை உருற்றகுமாரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

1) 1954 நேரு – கொத்தலாவ உடன்படிக்கைஇ 1964 சிறிமா – ஷாஸ்திரி உடன்படிக்கை மற்றும் 1974 சிறிமா – இந்திரா காந்தி உடன்படிக்கை காரணமாக உகண்டாவிலிருந்து இடி அமினினால் ஆசியர்கள் வெளியேற்றப்பட்டதைப் போல 300இ000க்கும் அதிகமான இந்திய வம்சாவளித் தமிழர்கள் வெளியேற்றப்பட்டமையானது சிறிலங்காவில் இந்தியாவின் அரசியல் தாக்கம் செலுத்தும் நிலையைக் குறைத்தது.

 

2) 1974 மற்றும் 1976 சிறிமா – இந்திரா காந்தி கடல் எல்லை ஒப்பந்தங்கள் காரணமாகஇ ராமநாடு ராஜாவின் ஜமீந்தாரியின் அங்கமொன்றாக இருந்த கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதுடன்இ இந் நடவடிக்கைகள் தமிழ் நாடு சட்ட சபையின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்றது. சிறிலங்காவில் இந்திய மீனவர்களுக்கான பராம்பரிய மீன் பிடிக்கும் உரிமையும் பலி கொடுக்கப்பட்டது.

 

தமிழர் தாயகத்தில் அதிவேகமான சிங்கள குடியேற்றங்கள்இ இந்தியாவின் பூகோள அரசியல் நலனுக்கு விரோதமானதும்இ ஆபத்தானதும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உருற்றகுமாரன்இ சிறிலங்காவின் சுதந்திரத்தின்போதுஇ இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் சிங்கள சனத்தொகையானது அரைச் சதவீரத்துக்கும் (0.5மூ) குறைவாக இருந்த நிலையில்இ தற்போது கிழக்கு மாகாணத்தில் 29 சதவீதத்தை சிங்களவர் உள்ளடக்கியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

 

 

'தற்போது பாக்கு நீரிணையயின் ஒரு புறத்தில் தமிழ் நாடு தமிழர்களும்இ மறு புறத்தில் ஈழத் தமிழர்களும் காணப்படுகின்றனர். தமிழரின் தாயகத்தில் சிறிலங்காவின் சிங்களக் குடியேற்றமானது தொடருமானால் தமிழ் நாடு ஒரு புறத்திலும்இ சிங்களவர் மறு புறத்திலும் இருப்பர். இந்த சிங்களமயமாக்கலானது சீன மயமாக்கலென சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் பிராந்தியங்களை சீனா கட்டுப்படுத்துவதைத் தடுப்பதற்கு இந்த சிங்களக் குடியேற்றத்தை தடுப்பதும்இ தமிழர் இடம்பெயர்தலை தடுப்பதும் இந்தியாவின் நலன்' எனவும் பிரதமர் உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

 

'ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு சிறிய ஐஸ்லாந்து (ஐஉநடயனெ) முக்கியமான பங்களிப்பை வழங்குவது போலஇ தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு சுதந்திரமானஇ இறைமையுள்ள தமிழீழம் பங்களிப்பை நல்கும்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதாகக் குறிப்பிட்டு கடிதத்தை பிரதமர் உருத்திரகுமாரன் முடித்துள்ளார்.