பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களை கைதுசெய்ய விசேட நடவடிக்கை

Admin
Aug 27,2022

பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைதுசெய்வதற்கு, இன்று முதல் விசேட நடவடிக்கையை முன்னெடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கூட்டம் ஒன்று, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில், இன்று இடம்பெற்றது.

அண்மைய நாட்களில், அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், நாடுமுழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 25 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.