இலங்கைக்கு கை கொடுத்த அமெரிக்கா

Admin
Aug 26,2022

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து மற்றுமொரு உதவி கிடைத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு பிறகு  ஏற்பட்ட  மோசமான நிலை

சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள மோசமான  பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு  உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி,  இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கான உணவினை வழங்கும் பொருட்டு சேவ் த சில்ரன் அமைப்புடன் இணைந்து 320 மெட்ரிக் டொன் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

இந்த உதவிப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.  இதன்போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, சேவ் த சில்ரன் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.