நிர்வாணமாக்கப்பட்ட போராளிகளின் படங்கள் எம்மூடாகவே வெளிவந்தது; சிறிதரன்!

Admin
Aug 25,2022

நிர்வாணமாக்கப்பட்ட போராளிகளின் படங்கள் எம்மூடாகவே வெளியே போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் கூறுகையில், ‘புகைப்பட பிடிப்பு என்பது சாதாரண விடயமல்ல. இங்கு ஒரு இனப்படுகொலை நடந்தது என்பதற்கு புகைப்படங்களே சான்றுகளாகின.

வித்தியாவின் புகைப்படம் வெளியான போது, அவருடன் அருகில் இருந்த மற்ற பெண்பிள்ளை தொடர்பில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதே பகுதியில் பலர் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்தமை யுத்த குற்றங்களிற்கான சாட்சியங்களாகின.

இவ்வாறான புகைப்படங்கள் எங்கள் ஊடாகவே வெளிவந்தது. அவற்றை நாங்களே கொண்டு சேர்த்தோம். தளபதிகள், போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டும், கண்கள் கட்டப்பட்டும் கொலை செய்யப்பட்ட படங்கள் முக்கிய ஆவணங்கள் ஆகும். இவை உலகில் எந்த இடத்திலும் நடந்திராத இனப்படுகொலைக்கான முக்கிய ஆவணங்களாகும்’ என கூறினார்.