மே 9 வன்முறைக்கு யார் காரணம்?

Admin
Aug 25,2022

சிரேஸ்டபிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனே மே 9 ம் திகதி வன்முறைகளிற்கு காரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மரணபிடியாணை ஆட்சி செய்யும் சமூகத்தில் ஒடுககுமுறைக்கு எதிராக செயற்படுவோம் என்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மே 9 ம் திகதி சம்பவங்களிற்கு தேசபந்து தென்னகோனே பொறுப்பு என உபுல்ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை என உறுதியளித்தவர் தேசபந்து தென்;னக்கோன் அதேவேளை பொலிஸ்சீருடையில் மறைந்து நின்றவாறு குண்டர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள அனுமதித்தவரும் அவரே என உபுல்ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர்கள் தாக்குதலை மேற்கொள்வதற்கும் பின்னர் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் தேசபந்து தென்னக்கோனே அனுமதித்தார்.

அச்சமடையவேண்டாம்,நீதித்துறை சார்பிலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பிலும் எந்த நேரத்திலும் நாங்கள் அரகலயவிற்கு ஆதரவாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.