சர்வகட்சி ஆட்சிக்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு

Admin
Aug 25,2022

சர்வகட்சி ஆட்சிக்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுயேட்சை கட்சிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் எவரிடமும் இல்லை
நாட்டின் நிலையைப் பார்க்கும்போது, ​​நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் பரந்த மனப்பான்மை அரசியல் கட்சிகளுக்கு இல்லை எனவும், அதற்கான விருப்பமும் வேலைத்திட்டமும் அதிபர் ரணிலிடமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.