'சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டுள்ளது'

Admin
Aug 24,2022

புதியச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை இலங்கைக்குப் பெற முடியாதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தபோது மேற்குறித்த வாக்குறுதியை சர்வதேசத்துக்கு வழங்கியிருந்தேன். இதனை ஏற்றுக்கொண்டு அப்போதிருந்த ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கியருந்ததாகவும் தெரிவித்தார்.