கோட்டா நாடு திரும்புவதில் சிக்கல்

Admin
Aug 23,2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு திரும்புவார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் தங்கியுள்ள அவர், நாளை (24) இலங்கை திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த பயணம் சுமார் இரண்டு வாரங்கள் தாமதமாகும் என தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை இந்த தாமதத்துக்கு காரணம் என அறியமுடிகிறது.

பாதுகாப்பு முக்கியப் பிரச்சினை என்பதால், அவர் நாடு திரும்புவதை தாமதப்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அவரது பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தியானதும் இரண்டு வாரங்களில் அல்லது அதற்கு முன்னரே அவர் திரும்பி வரலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.