முல்லை., வட்டுவாகலில் தொடரும் கடற்படைக்கான காணி அபகரிப்பு

Admin
Aug 23,2022

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகளை நில அளவை செய்யும் செயற்பாடு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என நில அளவை திணைக்களத்தால் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கோடு நில அளவை செய்யும் செயற்பாடு தொடர்ச்சியாக பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பு காரணமாக இம்முயற்விகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் இன்று நில அளவை செய்யும் செயற்பாடு இடம்பெறும் என நில அளவை திணைக்களத்தால் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.