ரணில்-கோட்டா தொலைபேசியில் உரையாடல்

Admin
Aug 23,2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச தமது மனைவியுடன் பேங்கொக்கில் உள்ளார்.

அவர் இந்த வாரம் இலங்கைக்கு மீளத் திரும்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

கோட்டாவின் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 24 அல்லது 25ம் திகதிகளில் கோட்டாபய நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகி இருந்த போதும், சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.