'புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களிற்கானது மாத்திரமில்லை'

Admin
Aug 22,2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் அலுவலகம் சர்வதேச அளவில் அனைத்து புலம்பெயர் சமூகத்தினரையும் உள்வாங்கியதாகவும் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை கருத்தில் கொண்டதாகவும் காணப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரட்நாயக்க  இந்த அலுவலகத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்

புலம்பெயர் அலுவலகம் ஒருங்கிணைப்பிற்கான மத்திய நிலையமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் என்பது புலம்பெயர் பிரிவுகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இலங்கை தொடர்பில் அவர்களுடன் ஈடுபாடுகளை ஏற்படுத்துவதற்குமானது குறிப்பாக முதலீடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பிலானது.இது முதலீட்டிற்கானதாக மாத்திரம் காணப்படாது சுற்றுலாத்துறை குறித்தும் கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களை குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதாக காணப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அலுவலகம் குறித்து எதிர்வரும் வாரங்களில் நாங்கள் ஆராயவுள்ளோம்,எனினும் இது குறிப்பிட்ட இனமொன்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக மாத்திரம் காணப்படாது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.