'கோட்டாவுக்கு பாதுகாப்பு வேண்டும்'

Admin
Aug 22,2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும், கோட்டா நாடு திரும்பினால் அவருக்குப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் மொட்டுக் கட்சியினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.