இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியீடு

Admin
Aug 22,2022

இலங்கை அரசாங்கம் சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை வெளியிட்டுள்ளது.

சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்போது பயன்படுத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவலை ஆராய்ந்து வருகின்ற தருணத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியாவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.