தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை; நம்பிக்கை வெளியிட்ட நீதி அமைச்சர்

Admin
Aug 21,2022

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவற்றுள் அரசியல் கைதிகள் விவகாரமும் ஒன்று. இதனைக் கருத்தில்கொண்டு அரசு செயற்படும்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருடனும் என்னுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம்.

அதற்கமைய முதல் கட்டமாக குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன் பின் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க அதிபர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.