பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Admin
Aug 21,2022

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு லிக்டன் சுற்றுவட்டத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுடைய ஆர்பாட்ட பேரணியின் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இன்னும் பலர் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும்  90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

எனவே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் எதிர்ப்பு போராட்டத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.