கோட்டாவுக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு

Admin
Aug 20,2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரியவந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.