கோட்டாபயவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு ; # BringBackGota ஹேஸ் டேக் மூலம் பரப்புரை

Admin
Aug 19,2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பும் போது அவரை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டுக்கு வரும் போது, அவரை வரவேற்க பெருந்திரளானோர் விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கோட்டாபயவிடம் எந்த நிபந்தனையும் இன்றி பதவியை வாங்கிய ரணில்! முக்கிய தகவல்களை வெளியிட்ட சனத் நிஷாந்த

சமூக வலைத்தளங்கள் ஊடாக கோட்டாபயவுக்கு ஆதரவானவர்கள் இதற்கான ஏற்பாடுகளையும் பரப்புரைகளையும் செய்து வருகின்றனர். முகநூல் ஊடாக # BringBackGota மற்றும் #BringHomeGota ஹேஸ் டேக் மூலம் இந்த பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாய்லாந்தின் பேங்கொக்கில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார் என அவரது உறவினரான உதயங்க வீரதுங்க தகவல் வெளியிட்டிருந்தார்.