இளைஞரின் காற் சட்டையில் வெடித்து சிதறிய தொலைபேசி - அச்சத்தில் மக்கள்

Admin
May 11,2023

இளைஞர் ஒருவரின் கால் சட்டை பாக்கெட்டில்  வைத்திருந்த தொலைபேசி  வெடித்த சம்பவம் ஒன்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம்  கோழிக்கோடு நகரில் இடம்பெற்றுள்ளது. 

ரயில்வே துறை ஒப்பந்த தொழிலாளியான 23 வயதுடைய ஹரிஸ் ரஹ்மான் அலுவலகத்திற்கு சென்ற வேளையிலே தொலைபேசி வெடித்துள்ளது. 

குறித்த தொலைபேசியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்ரே ஹரிஸ் ரஹ்மான் வங்கியுள்ளதுடன் எதிர்பாராத விதமாக அது வெடித்து கால் சட்டையில்  தீ பிடித்துள்ளது. 

இதனால் ரஹ்மான் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளார். 

அதிஷ்டவசமாகஅவர்  சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்பட்டுள்ளது. 

அவ்வாறிருக்க, கடந்த ஏப்ரல் 24 திகதி , திருச்சூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி, செல்லிடபேசி வெடித்து உயிரிழந்தமையும்  குறிப்பிடத்தக்கது.