நைஜீரியா படகு விபத்தில் 15 சிறுவர்கள் உயிரிழப்பு!

Admin
May 11,2023

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 15  குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர்  குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த படகு ஆற்றின் நடுவே சென்றுக்கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 சிறுமிகள், 2 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மீட்பு பணியாளர்கள் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.